வேட்டையன் படத்தோடு மோத தயாரான கங்குவா!
![வேட்டையன் படத்தோடு மோத தயாரான கங்குவா!](https://www.fulloncinema.in/wp-content/uploads/2024/06/news-18-images-2024-06-28T001918.491-2024-06-f222aaa48bed0f9825b6bd6edb33e32f-3x2-1-850x560.webp)
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வந்த திரைப்படம் தான் கங்குவா. படம் சில வருடங்களாகவே உருவாகி வரும் நிலையில், படத்தின் அப்டேட் கேட்டு சூர்யா ரசிகர்கள் இணையத்தில் கொந்தளித்து வந்தனர்.
இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் மாதம் 10ஆம் தேதி படத்தினை திரைக்குக் கொண்டு வருகிறது படக்குழு.
இதன் அறிவிப்பை நேற்றைய தினம் படக்குழு வெளியிட்டது. அதே தேதியில் தங்களது படத்தினை கொண்டு வர இருப்பதாக வேட்டையன் படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், சூர்யாவின் கங்குவா, வேட்டையன் படத்தோடு மோதவிருக்கிறது. மிக நீண்ட விடுமுறை தினம் என்பதால், இரு படங்களும் நல்லதொரு வசூல் வேட்டையை ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது.