முதல் நாளில் மட்டும் இத்தனை கோடியா.? வசூலில் செழிக்கும் கல்கி 2898AD!
![முதல் நாளில் மட்டும் இத்தனை கோடியா.? வசூலில் செழிக்கும் கல்கி 2898AD!](https://www.fulloncinema.in/wp-content/uploads/2024/06/WhatsApp-Image-2024-06-24-at-18.13.49_3d139e22-850x560.jpg)
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் கல்கி 2898AD.
இப்படம் நேற்று முன் தினம், அதாவது வியாழன் அன்று திரைக்கு வந்தது. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் சந்தோஷ் நாராயணனின் இசையிலும் இந்த படம் உருவாகி இருந்தது.
படம் வெளியாகி ஒரு சில இடங்களில் கலவையான விமர்சனங்களை தந்த போதிலும், இந்த படம் முதல் நாளிலேயே 191.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மேலும் இனிவரும் நாட்களில் இந்த படம் அதிக வசூலை வாரிக் குவிக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.