6 நாட்களில் 55 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்த “மகாராஜா”

 6 நாட்களில் 55 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்த “மகாராஜா”

இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்க உருவாகி கடந்த வெள்ளியன்று திரைகண்ட திரைப்படம் தான் மகாராஜா.

படம் வெளியான முதல் நாளே நல்லதொரு விமர்சனத்தை படம் பெற்றதால், அடுத்தடுத்த நாட்களில் திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

மேலும், நாளுக்கு நாள் வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது இந்த மகாராஜா. படம் வெளியாகி 6 நாட்கள் ஆன நிலையில் இதுவரை சுமார் 55 கோடி ரூபாய் வசூலைக் குவித்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும்,இந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால், இந்த வார விடுமுறையையும் மகாராஜா திரைப்படம் ஆக்கிரமித்துக் கொள்ளும் என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.

 

Related post